TNPSC Thervupettagam

தமிழ்நாட்டின் அந்நிய நேரடி முதலீடுகளின் வரவு 2023-24

June 26 , 2024 22 days 150 0
  • 2022-23 ஆம் நிதியாண்டில் 2.17 பில்லியன் டாலராக இருந்த தமிழ்நாட்டின் அந்நிய நேரடி முதலீடுகளின் (FDI) வரவானது, 2023-24 ஆம் நிதியாண்டில் சுமார் 2.44 பில்லியன் டாலர் அதிகரித்து 12.44% உயர்வை பதிவு செய்துள்ளது.
  • 2022-23 ஆம் நிதியாண்டில் 46.03 பில்லியன் டாலராக இருந்த இந்தியாவிற்கான ஒட்டு மொத்த அந்நிய நேரடி முதலீடுகளின் வரவு ஆனது 2023-24 ஆம் நிதியாண்டில் 44.42 பில்லியன் டாலராக குறைந்துள்ளது.
  • 2020-21 ஆம் நிதியாண்டில் 1.66 பில்லியன் டாலராக இருந்த மாநிலத்தின் மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியானது 2023-24 ஆம் நிதியாண்டில் 9.56 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
  • 2022-23 ஆம் நிதியாண்டில் 4.71 பில்லியன் டாலராக இருந்த குஜராத்தின் அந்நிய நேரடி முதலீடு ஆனது 2023-24 ஆம் நிதியாண்டில் 54.9% அதிகரித்து 7.3 பில்லியன் டாலராக இருந்தது.
  • 1.30 பில்லியன் டாலராக இருந்த தெலுங்கானாவின் அந்நிய நேரடி முதலீட்டு வரவு ஆனது 133% உயர்ந்து 3.03 பில்லியன் டாலராக உள்ளது.
  • 2022-23 ஆம் நிதியாண்டில் 10.43 பில்லியன் டாலராக இருந்த கர்நாடகாவின் அந்நிய நேரடி முதலீடு ஆனது, 2023-24 ஆம் நிதியாண்டில் சுமார் 37% குறைந்து 6.57 பில்லியன் டாலராக இருந்தது.
  • டெல்லியின் அந்நிய நேரடி முதலீடுகளின் மதிப்பு ஆனது, 2023-24 ஆம் நிதியாண்டில் 13.41% குறைந்து 6.52 பில்லியன் டாலராக இருந்த நிலையில், இது முந்தைய ஆண்டில் 7.53 பில்லியன் டாலராக இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்