TNPSC Thervupettagam

தமிழ்நாட்டின் அருந்ததியர் பிரிவினருக்கான இடஒதுக்கீடு

August 7 , 2024 108 days 199 0
  • சமூக ரீதியில் மற்றும் கல்வியில் பின்தங்கிய அருந்ததியர் பிரிவினருக்கு பட்டியலிடப் பட்டச் சாதியினர் (SC) பிரிவில் முன்னுரிமை அளிக்கும் தமிழ்நாடு மாநிலச் சட்டத்தின் அரசியலமைப்பு சார் செல்லுபடித்தன்மைக்கு உச்சநீதிமன்றம் ஆதரவளித்துள்ளது.
  • ஒரு வகுப்பினுள் துணை வகைப்பாடு உருவாக்கச் செய்வது என்பது ஒரு நிலையான சமத்துவத்தினைப் பாதுகாப்பதற்கான அரசியலமைப்புத் தேவை என்று நீதிமன்றம் கூறியது.
  • தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றம் ஆனது 2009 ஆம் ஆண்டு தமிழ்நாடு அருந்ததியர் இடஒதுக்கீடு சட்டத்தினை இயற்றியது.
  • பட்டியலிடப்பட்ட சாதியினர் பிரிவில் மாநில அரசுப் பணிகளில் நியமனங்கள் அல்லது பதவிகளில் ஒரு முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியர்களுக்கான இட ஒதுக்கீட்டை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • அரசியலமைப்பின் 341வது சட்டப் பிரிவின் கீழ் குடியரசுத் தலைவர் அவர்களால் அறிவிக்கப் பட்ட 76 பட்டியலிடப்பட்ட சாதியினர் பிரிவினர் பட்டியலில் அருந்ததியர் எனும் குழுவில் அருந்ததியர், சக்கிலியர், மதரி, மதிகா, பகாடி, தோட்டி மற்றும் ஆதி ஆந்திரர் ஆகிய சாதிப் பிரிவுகளை சேர்க்கும் வகையிலான வரையறையினை இந்த சட்டம் வகுத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்