தமிழ்நாடு அரசானது முதலமைச்சரின் விரிவான சுகாதார காப்பீட்டுத் திட்டத்தின் (Chief Minister’s Comprehensive Health Insurance Scheme-CMCHIS) கீழ் 2 இலட்சமாக இருந்த உச்ச வரம்பை 5 லட்சமாக உயர்த்தியுள்ளது.
இது 2018 டிசம்பர் 01 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. இதன் மூலம்58 கோடி குடும்பங்கள் பணமில்லா சிகிச்சை பெறும் திட்டமாக இதன் மூலம் பயனடைவர்.
மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் உள்ள பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனாவுடன் மாநில காப்பீட்டுத் திட்டத்தை இணைப்பதையடுத்து இந்த முடிவானது எடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பயனாளிகள் அரசு மருத்துவமனைகள் அல்லது 40% அளவில் NABH (National Accreditation Board for Hospitals and Healthcare Providers) அங்கீகாரத்துடன் கூடிய 700-க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியும்.