TNPSC Thervupettagam

தமிழ்நாட்டின் சொந்த வரி வருவாய் 2023-24

November 5 , 2023 258 days 275 0
  • தமிழகத்தின் சொந்த வரி வருவாய் ஆனது 2023-24 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 4.92% அதிகரித்து 72,017.8 கோடி ரூபாயாக பதிவாகியுள்ள நிலையில் இது கடந்த ஆண்டின் இதே காலக் கட்டத்தில் 68,637.7 கோடி ரூபாயாக இருந்தது.
  • தமிழகத்தின் மொத்த வரி வருவாயில், மாநிலத்தின் சொந்த வரி வருவாய் (SOTR) 70% ஆகும்.
  • 2023 ஆம் ஆண்டின் ஏப்ரல்-செப்டம்பர் மாத காலக் கட்டத்தில் தமிழக மாநிலத்தின் சரக்கு மற்றும் சேவை வரி (SGST) வசூலானது, சுமார் 12.2% அதிகரித்து 29,481.97 கோடி ரூபாயாக இருந்தது.
  • இது கடந்த ஆண்டின் இதே காலக் கட்டத்தில் 26,285.31 கோடி ரூபாயாக இருந்தது.
  • கடந்த ஆண்டில் 8,662.15 கோடி ரூபாயாக இருந்த முத்திரைத் தாள்கள் மற்றும் பதிவுக் கட்டணங்கள் மூலம் பெறப்பட்ட வருவாய் ஆனது 2023-24 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 9,241.14 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
  • 2023 ஆம் ஆண்டின் ஏப்ரல்-செப்டம்பர் மாத காலத்தில் தமிழகத்தின் வருவாய் பற்றாக் குறையானது 21,635.55 கோடி ரூபாயாக இருந்தது.
  • 2023-24 ஆம் ஆண்டின் முதல் பாதியில் பதிவான நிதிப் பற்றாக்குறை என்பது - மொத்த வரவுகளுக்கும் மொத்தப் பங்கீடுகளுக்கும் உள்ள வித்தியாசம் என்பது - 45,168.86 கோடி ரூபாயாக இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்