இந்திய ரிசர்வ் வங்கி ஆனது, சமீபத்தில் தமிழ்நாட்டிற்கான வழிவகைக்கான முன்பண (WMA) வரம்பினை சுமார் 3,601 கோடி ரூபாயிலிருந்து 4,582 கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில், குறுகிய கால கடன் வாங்கும் வசதியை தமிழ்நாடு மிகவும் முழுமையாகப் பயன்படுத்தவில்லை.
இது மாநிலத்தில் போதுமான பணப்புழக்கம் உள்ளதற்கான அறிகுறியாகும்.
இந்திய ரிசர்வ் வங்கியானது WMA என்ற வடிவில் மாநிலங்களுக்கு குறுகிய கால நிதி உதவியை வழங்குகிறது.
இது மாநில அரசுகளுக்கு அவற்றின் வரவுகள் மற்றும் கொடுப்பணவுகளின் பணப் புழக்கத்தில் நிலவும் தற்காலிகச் சமமின்மைகளைச் சமாளிக்க உதவுகிறது.
2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதியின் முடிவில், தமிழக மாநில அரசின் கருவூல பத்திரங்களின் ஏலத்தில் 3,964 கோடி ரூபாய் முதலீடு இருந்தது.