தமிழ்நாடு மாநில அரசானது தனது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை மீண்டும் அமைத்துள்ளது.
ஓய்வு பெற்ற நீதிபதியான R தணிகாசலம் என்பவர் இந்த ஆணையத்தின் தலைவராக செயல்பட இருக்கின்றார்.
இது இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினரின் (OBC – Other Backward Classes) பட்டியலில் சமூகத்தினரை சேர்த்தல் அல்லது இணைக்கப்படாமல் இருத்தல் குறித்த புகார்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப் பட்டுள்ளது.
பின்னணி
தமிழ்நாட்டில் முதலாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையமானது திமுக ஆட்சிக் காலத்தில் 1969 ஆம் ஆண்டு நவம்பர் 13 அன்று ஏற்படுத்தப்பட்டது.
இது சட்டநாதன் ஆணையம் என்று அழைக்கப் பட்டது.
சட்டநாதன் ஆணையமானது தமிழ்நாட்டில் உள்ள OBCயினரிடையே “பசை அடுக்கை” (Creamy Layer) அறிமுகப்படுத்தப் பரிந்துரைத்தது.
1992 ஆம் ஆண்டின் மண்டல ஆணைய வழக்கு அல்லது இந்திரா சௌகானி வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களைத் தொடர்ந்து தமிழ்நாடு மாநில அரசானது நிரந்தரமாக தமிழ்நாடு மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அமைத்தது.
இது 1993 ஆம் ஆண்டில் ஓய்வுபெற்ற நீதிபதியான K சண்முகம் என்பவரின் தலைமையின் கீழ் அமைக்கப் பட்டது.
இது இந்திய அரசியலமைப்பின் சரத்து 340ன் வரிசையில் சரத்து 16(4)ன் கீழ் அமைக்கப் பட்டது.