தமிழ்நாட்டின் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் புதுப்பிப்பு
February 15 , 2025 8 days 91 0
பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் (BC) பட்டியலில் அகமுடையார் பிரிவிலிருந்து துளுவ வேளாளர் சமூகத்தினை நீக்குவதற்கு மாநில அரசு அனுமதித்துள்ளது.
இதன் மூலம் கள்ளர்கள் மற்றும் மறவர்கள் ஆகிய சமூகப் பிரிவுகளை உள்ளடக்கிய 'முக்குலத்தோர்' எனப்படும் மூன்று பிரிவுகளில் ஒரு பிரிவான அகமுடையார் என்ற பிரிவுடனான இந்தச் சமூகத்தின் 80 ஆண்டுகால "தொடர்பு" முடிவுக்கு வருகிறது.
மூத்த அரசு ஊழியர் A.N.சட்டநாதன் தலைமையிலான முதல் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் ஆணையம் ஆனது, 1969-70 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அமைக்கப் பட்டது.
இந்த ஆணையம் ஆனது, "கள்ளர் பிரிவினரைப் போலவே, அகமுடையார் பிரிவும் தென் மாவட்டங்களிலிருந்து குடிபெயர்ந்தனர், ஆனால் அவர்களுக்கும் சென்னையின் அகமுடையான் முதலியார்களுக்கும் துளுவ வேளாளர்களுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை" என்ற பிரதிநிதித்துவ வாதங்களைக் கொண்டு, 'அகமுடையார்' என்ற அந்தச் சொல்லினைப் பயன்படுத்தியது.
J.A.அம்பாசங்கர் தலைமையிலான இரண்டாவது BC குழு (1982-85) அமைக்கப்பட்டது.
இரண்டாவது ஆணையம் ஆனது ஒரு சாதி வாரிக் கணக்கெடுப்பை நடத்தி, அந்தப் பிரிவினர் தங்களை அடையாளம் கண்டுள்ள விதத்தின்படி, துளுவ வேளாளர்களின் தனிக் கணக்கீடு சாத்தியமில்லை என்று கூறியது.