தமிழக முதலமைச்சர் எடப்பாடி K.பழனிச்சாமி மாநிலத்தின் வனக் கொள்கையினை வெளியிட்டுள்ளார்.
வன (பாதுகாப்பு) சட்டம், 1980-ஆல் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகள், சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்காக தற்போது உள்ள வனப்பரப்பினை பாதுகாத்திட வேண்டி கட்டாயமாக செயல்படுத்தப்பட உள்ளன.
மேலும் மாநிலத்தில் உள்ள சதுப்பு நிலக்காடுகளை கடலோரப் பகுதிகளில் உயிரி-கேடயமாக வனத்துறை மேம்படுத்த உள்ளது.
இக்கொள்கை 2025-ல் வனம் மற்றும் மரங்களின் பரப்பினை குறைந்த அளவு 30 சதவீதம் அளவிற்கு உயர்த்துவதற்கான வழிமுறைகளையும் ஆராய்கின்றன. மேலும் கிராம வனக் குழுக்களில் (Village forest Committees - VFC) பெண்களின் பங்களிப்பினையும் இது மேம்படுத்தும்.
தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் 30.92 சதவீதம் உள்ளன. மேலும் 15 வன விலங்குகள் சரணாலயங்கள், 5 தேசிய பூங்காக்கள், 15 பறவைகள் சரணாலயங்கள், 3 உயிர்க் கோள காப்பகங்கள், 4 புலிக் காப்பகங்கள் ஆகியவை தமிழ்நாட்டில் உள்ளன.