TNPSC Thervupettagam

தமிழ்நாட்டின் வனப்பகுதி 2023

December 25 , 2024 19 days 142 0
  • தமிழ்நாடு மாநிலத்தின் வனப் பரப்பானது கடந்த பத்தாண்டுகளில் இருந்த அளவை விட 9.09% அதிகரித்து, 2,205.01 சதுர கிலோமீட்டர் பசுமைப் பரவலைக் கொண்டுள்ளது.
  • தமிழ்நாட்டின் வனப் பரப்பளவு 24,245.21 சதுர கிலோமீட்டராக இருந்த நிலையில் 2023 ஆம் ஆண்டில் அது 26,450.22 சதுர கிலோமீட்டராக அதிகரித்துள்ளது.
  • 2023 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளுக்கு இடையேயான ஒரு ஒப்பீடானது, மாநிலத்தில் சுமார் 61 சதுர கிலோமீட்டர் காடுகளின் இழப்பைக் குறிப்பிடுகிறது.
  • இதில் உரிமை அல்லது சட்ட அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல், "வனப் பரவல்" என்ற சொல்லானது, குறைந்தபட்சம் ஒரு ஹெக்டேர் பரப்பளவு மற்றும் 10% அல்லது அதற்கு மேற்பட்ட மரங்களின் பரவல் கொண்ட அனைத்து நிலங்களையும் உள்ளடக்கியது.
  • மாநிலத்தின் மொத்த 26,450.22 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலான காடுகளில்,
    • 13% (3,586.19 சதுர கி.மீ.) மட்டுமே மிகவும் அடர்ந்த காடுகளாக வகைப்படுத்தப் பட்டுள்ளது,
    • 41.7% (11,027.03 சதுர கி.மீ) மிதமான அடர்த்தியான காடுகளாகவும், மற்றும்
    • 44.83% (11,837 சதுர கி.மீ) திறந்த வெளிக் காடுகளாகவும் வகைப்படுத்தப் பட்டு உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்