தமிழ்நாடு மாநில அரசானது, ஆனைமலை புலிகள் வளங்காப்பகத்தில் ஒரு சிறப்பு மையத்தினை நிறுவச் செய்வதன் மூலம் இருவாச்சி பறவைகளின் வாழ்விடங்களைப் பாதுகாப்பதற்கான வளங்காப்பு முயற்சிகளைத் தொடங்க உள்ளது.
சிங்கவால் குரங்கு, சென்னை முள்ளெலி/முள்ளம்பன்றி, கழுதைப் புலிகள் மற்றும் பெளி மீன்கள் போன்ற அருகி வரும் உயிரினங்களின் வாழ்விடப் பாதுகாப்பு, அதன் எண்ணிக்கை மதிப்பீடு மற்றும் சமூக விழிப்புணர்வு திட்டங்களுக்காக 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பாதுகாக்கப்படும்.
வங்காள நரி மற்றும் குள்ள நரி ஆகியவற்றின் வளங்காப்பிற்கு வேண்டி முன்னுரிமை அளிக்கப் படும்.
வனத்துறையானது, சிற்றாமைகள் திரளும் பகுதிகளை அடையாளம் காண்பதற்காக 84 லட்சம் ரூபாய் செலவில் தனது முதல் தொலை அளவியல் ஆய்வை மேற்கொள்ள உள்ளது.
மாநில அரசானது, சமூக வளங்காப்பு தலைமைத்துவ விருதுகளை உருவாக்குவதோடு, 20,000 மாணவர்களுக்கு சான்றிதழ் திட்டத்தைத் தொடங்க உள்ளது.
சென்னை வண்டலூரில் உள்ள மேம்பட்ட வனவிலங்கு வளங்காப்பு நிறுவனத்தில், வளங்காப்பு மற்றும் பரிணாம மரபியல் மையம் மற்றும் உயிரினங்களின் உயிர்ப் பிழைப்பு மையம் ஆகிய இரண்டு புதிய ஆராய்ச்சி மையங்களை மாநில அரசு நிறுவ உள்ளது.
விருதுநகர், கள்ளக்குறிச்சி, இராமநாதபுரம், நாகப்பட்டினம், நீலகிரி மற்றும் மேக மலை ஆகிய ஆறு இடங்களில் ஆறு புதிய வனவிலங்கு வளங்காப்பு காப்பு மையங்கள் அமைக்கப் படும்.
சேலத்தில் உள்ள குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா மற்றும் வேலூரில் உள்ள அமிர்தி உயிரியல் பூங்காவை மேம்படுத்துவதற்காக என அரசாங்கம் 5 கோடி முதலீடு செய்ய உள்ளது.
கடல் சார் பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாக்க சென்னை கடற்கரைக்கான சிறப்புக் கடல் சார் படை உருவாக்கப்படும்.
மனித-யானை மோதலைத் தணிப்பதற்காக வேண்டி திண்டுக்கல்லில் விரைவு பதில் நடவடிக்கைக் குழு உருவாக்கப்படும்.
சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, திருப்பூர் மற்றும் சேலம் ஆகிய சில இடங்களில் மரக் கணக்கெடுப்பு மற்றும் பசுமைத் தளங்கள் மதிப்பீடு நடத்தப்படும்.