TNPSC Thervupettagam

தமிழ்நாட்டிற்கான அந்நிய நேரடி முதலீடு

December 20 , 2023 341 days 298 0
  • 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் இருந்து கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஒட்டு மொத்த அந்நிய நேரடி முதலீடு (FDI) சுமார் 10 பில்லியன் டாலரை எட்டியுள்ளது.
  • நடப்பு நிதியாண்டின் செப்டம்பர் மாதம் வரை, 1.3 பில்லியன் டாலர் மதிப்பிலான அந்நிய நேரடி முதலீடு அம்மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • 2022-23 ஆம் நிதியாண்டில், இம்மாநிலத்தில் 2.17 பில்லியன் டாலர் மதிப்பிலான அந்நிய நேரடி முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் இது முந்தைய ஆண்டில் மேற் கொள்ளப்பட்ட 3 பில்லியன் டாலரை விடக் குறைவு ஆகும்.
  • 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மற்றும் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆகியவற்றிற்கு இடைப்பட்ட காலத்தில் அந்நிய நேரடி முதலீட்டை ஈர்ப்பதில் மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் குஜராத் ஆகியவற்றைத் தொடர்ந்து தமிழ்நாடு மாநிலம் நான்காவது இடத்தில் உள்ளது.
  • தமிழ்நாடு மாநிலத்திற்கு அடுத்தபடியாக ஹரியானா மற்றும் தெலுங்கானா ஆகிய சிறிய மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன.
  • தமிழ்நாடு உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பானது 2024 ஆம் ஆண்டு ஜனவரி 07 மற்றும் 08 தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்