TNPSC Thervupettagam

தமிழ்நாட்டிற்கான இந்தியப் பறவைகளின் நிலை குறித்த அறிக்கை

April 24 , 2024 214 days 249 0
  • தமிழகத்தில் வலசை வரும் வாத்துகள், நீர்ப்பறவைகள், பருந்துகள், வனவாழ் பறவைகள் மற்றும் திறந்தவெளி வாழ்விடங்களைச் சார்ந்து வாழும் பிற இனங்கள் பெருமளவில் குறைந்து வருகின்றன.
  • தமிழ்நாட்டில் காணப்படும் 85 இனங்கள் ‘உயர் வளங்காப்பு முன்னுரிமை வழங்கப் படும் இனம்’ என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
  • தமிழ்நாட்டின் நீண்ட காலப் போக்கு (கடந்த 30 வருடங்கள்) பொதுவாக புள்ளிகள் கொண்ட பறவைகளான நீலச் சிறகு வாத்து, ஆலா, நண்டு உண்ணும் உப்புக் கொத்தி, மணல் நிற உப்புக்கொத்தி, கிளுவை மற்றும் களியன் போன்ற பறவைகளின் வருகை கூட வேகமாக குறைந்து வருவதைக் குறிக்கிறது.
  • MYNA தளம் ஒரு குறிப்பிட்டப் புவியிடத்தில் உள்ள பறவைகள் மற்றும் அவற்றின் வளங் காப்பு அந்தஸ்து குறித்து அடையாளம் காண உதவுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்