TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையங்கள்

September 17 , 2017 2672 days 995 0
  • தேசிய சுகாதாரக் கொள்கையின் கீழ் தமிழ்நாடு முழுவதும் வீடற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐந்து அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன .
  • இம்மையங்கள் அமைந்துள்ள இடங்கள் வருமாறு ,
  1. வேலூர்
  2. திருப்பூர்
  3. திருவண்ணாமலை
  4. தேனி
  5. விழுப்புரம்
  • மனநல ஆரோக்கியம் மற்றும் வறுமை ஒழிப்பு பணிகளில் ஈடுபடும் 'தி பான்யன்' (The banyan) எனும் அரசு சாரா தொண்டு நிறுவன உதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
  • அரசு நடத்தும் மற்றும் அரசின் நிதியுதவி பெரும் மருத்துவமனைகளில் , வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள வீடற்ற மனநலம் பாதிப்பு உடையவர்கள் முறையான சிகிச்சையும் , கட்டணமற்ற மருத்துவ சேவையும் பெற உரிமை உடையவர்கள் எனும் மனநல சுகாதார சட்டம் , 2017 (Mental healthcare Act, 2017) இன் படி இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்