தமிழ்நாட்டில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளின் முக்கியப் பணியிட மாற்றம்
May 17 , 2023 560 days 307 0
T.உதயச்சந்திரன் நிதித்துறையின் முதல் நிலைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போதைய நிதிச் செயலாளரான N.முருகானந்தம் முதலமைச்சரின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப் பட்டுள்ளார்.
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளரான J. ராதாகிருஷ்ணன் தற்போது சென்னைப் பெருநகர மாநகராட்சியின் புதிய ஆணையராகச் செயல்படுவார்.
P.அமுதா, தற்போது உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப் பட்டுள்ளார்.
இந்தப் பதவியை வகிக்கும் நான்காவது பெண் திருமதி அமுதா ஆவார்.
சாந்தா ஷீலா நாயர் தமிழ்நாட்டின் உள்துறைச் செயலாளராகப் பதவியேற்ற முதல் பெண்மணி ஆவார்.