தமிழகத்தில் உள்ள இரப்பர் தோட்டங்களில் மீண்டும் நடவு செய்வதற்கான அனுமதியினைப் பெறுவதற்குப் பல மாதங்கள் ஆகும் என்பதால் நஷ்டம் ஏற்படுகிறது.
பெரும்பாலான இரப்பர் தோட்டப் பகுதிகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளன.
தோட்டப் பகுதிகளில் உள்ள மேம்படுத்தப்பட்ட மற்றும் பயிரிடப்பட்டப் பகுதிகள் 1979 ஆம் ஆண்டில் தமிழ்நாடு தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வரப் பட்டன.
இந்த நிலமானது வனப் பகுதி நிலமாக வரையறுக்கப் பட்டது.
எனவே, அசையாச் சொத்தை உரிமம் மாற்றவோ அல்லது விற்கவோ மாவட்ட அளவிலான வனக் குழுக்களின் அனுமதி தேவையாகும் என்ற நிலையில். இதற்கான அனுமதியினைப் பெற பல மாதங்கள் ஆகிறது.
தமிழ்நாட்டில் 26,268 ஹெக்டேர் பரப்பளவில் இரப்பர் பயிரிடப்படுகின்ற நிலையில், வருடாந்திர இரப்பர் உற்பத்தி (கிட்டத்தட்ட 400 கோடி ரூபாய்) 24,163 டன்கள் ஆகும்.
இதில், கிட்டத்தட்ட 105 டன் இரப்பர் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டில் ரப்பர் பயிரிடப் பட்ட மொத்த நிலப் பரப்பின் ஐந்தில் ஒரு பங்கு பெரிய விவசாயிகளிடம் உள்ளது.
மீதியிருக்கும் நிலமானது ஒவ்வொரு நபர்களிடமும் 50 ஏக்கர்களுக்கும் குறைவான அளவில் சிறிய விவசாயிகளிடம் உள்ளது.
ரப்பர் அறுவடையானது ரப்பர் மரம் நடப் பட்டதில் இருந்து ஏழாவது வருடத்தில் ஆரம்பிக்கப் படுவதோடு அதன் 21-30 வருடங்கள் வரை அது தொடர்கிறது.