தமிழ்நாடு மாநில அரசானது 'இரும்பின் தொன்மை: தமிழ்நாட்டிலிருந்து கிடைக்கப் பெற்ற சமீபத்திய கதிரியக்கக் கால மதிப்பீட்டுத் தேதிகள்' என்ற தலைப்பிலான ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிவகளையில் கிடைக்கப் பெற்ற முதுமக்கள் தாழி மாதிரிகளின் கதிரியக்கக் கால மதிப்பீடு மூலம் இந்தப் புதியக் கண்டுபிடிப்பு ஆனது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்றையத் தமிழ்நாட்டில் இரும்பு காலம் என்பது சுமார் கி.மு. 3,345 ஆம் ஆண்டிலேயே தொடங்கியிருக்கலாம் என்று இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
இப்புதியக் கண்டுபிடிப்புகளானது தமிழக நிலப்பரப்பில் இரும்பு அறிமுகமான காலம் ஆனது 5,300 ஆண்டுகளுக்குப் பிந்தையது என்று கூறுகிறது.
இந்தக் கண்டுபிடிப்பு ஆனது, வடக்கு மற்றும் வடமேற்கு இந்தியாவில் சிந்து சமவெளி நாகரிகம் இருந்த அதே காலக் கட்டத்தில் தென்னிந்தியாவில் இரும்புக் கால நாகரிகம் இருந்ததாகக் கூறுகிறது.
இந்தக் கண்டுபிடிப்புகளுக்கு முன்பு, தமிழ்நாட்டின் முற்கால இரும்புப் பொருட்கள் சுமார் கி.மு. 2172 ஆம் ஆண்டு காலத்தைச் சேர்ந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மயிலாடும்பாறையில் இருந்து கண்டெடுக்கப்பட்டன.
கூடுதலாக, மற்றொரு அகழாய்வுத் தளமான தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்ச நல்லூர் பகுதியில், கி.மு. 2517 ஆம் காலத்தைச் சேர்ந்த இரும்புப் பொருட்களுடன் தொடர்புடைய ஒரு நிலக்கரி மாதிரி கண்டெடுக்கப்பட்டது.
இதனுடன் ஒப்பிடுகையில், கர்நாடகாவில் உள்ள பிரம்மகிரி மற்றும் ஐதராபாத்திற்கு அருகிலுள்ள காச்சிபெளலி போன்ற இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து கிடைக்கப் பட்ட இரும்புப் பொருட்கள் முறையே கி.மு. 2140 மற்றும் கி.மு. 2200 ஆம் காலக் கட்டத்தினைச் சேர்ந்தவையாகக் கூறப்படுகின்றன.
இதற்கு முன் சுமார் கி.மு. 1,380 ஆம் ஆண்டுக்கு முந்தைய காலக்கட்டத்தினைச் சேர்ந்த சான்றுகள் கிடைக்கப் பெற்றதால் ஹிட்டைட் பேரரசு என்பது (நவீன கால துருக்கியில்) இரும்பைப் பயன்படுத்திய முதல் நாகரிகம் என்று நம்பப்பட்டது.