TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் உயர்கல்வியின் நிலை – 9வது NIRF

August 16 , 2024 99 days 239 0
  • 9வது தேசிய கல்வி நிறுவனங்கள் தரவரிசை கட்டமைப்பு அறிக்கையின் முடிவுகளின் படி, உயர்கல்வி பயில்வதற்கான மிகவும் விரும்பத்தகு இடமாக தமிழகம் தொடர்ந்து திகழ்கிறது.
  • சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆனது ஒட்டு மொத்தத் தர வரிசை மற்றும் பொறியியல் பிரிவில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
  • இது ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கம் பிரிவில் இரண்டாவது இடத்தினைப் பெற்றுள்ளது.
  • நாட்டிலுள்ள 100 முன்னணி நிறுவனங்களில் 18 நிறுவனங்கள் தமிழக மாநிலத்தில் அமைந்துள்ளன.
  • அவற்றுள் ஆறு மாநில பல்கலைக்கழகங்கள், 10 தனியார் நிறுவனங்கள் மற்றும் இரண்டு மத்தியக் கல்வி நிறுவனங்கள் அடங்கும்.
  • அண்ணா பல்கலைக்கழகம் (தரவரிசை 20); பாரதியார் பல்கலைக்கழகம் (44); பாரதிதாசன் பல்கலைக்கழகம் (55); சென்னைப் பல்கலைக்கழகம் (64); அழகப்பா பல்கலைக் கழகம் (76) மற்றும் பெரியார் பல்கலைக்கழகம் (100) ஆகியவை அரசின் கீழ் இயங்கும் நிறுவனங்கள் ஆகும்.
  • அண்ணா பல்கலைக்கழகம் ஆனது நாட்டிலுள்ள அரசின் நிதியுதவி பெறும் மாநிலப் பல்கலைக்கழகங்களில் முதலிடம் வகிக்கிறது மற்றும் பல்கலைக்கழகங்களுள் 13வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • வேளாண் பிரிவில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆனது 6வது இடத்திலும், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் ஆனது 17வது இடத்திலும் உள்ளன.
  • ஊட்டியில் உள்ள JSS மருந்தியல் கல்லூரி ஆனது 6வது இடத்தையும், சென்னை மருத்துவக் கல்லூரியின் மருந்தியல் கல்லூரி 78வது இடத்தையும் பெற்றுள்ளது.
  • ஆறு கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் கல்லூரிகளில் நான்கு சென்னையில் உள்ளன.
  • மருத்துவக் கல்லூரிகளில், சென்னை மருத்துவக் கல்லூரி 10வது இடத்தையும், கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி 3வது இடத்தையும் பெற்றுள்ளது.
  • கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், கடந்த ஆண்டு 3வது இடத்தில் இருந்த சென்னை மாநிலக் கல்லூரி 13வது இடத்தையும், லயோலா 8வது இடத்தையும் பெற்று உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்