TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் உள்ள தனியார் பல்கலைக்கழகங்கள்

July 15 , 2018 2196 days 1422 0
  • சிவ் நாடார் பல்கலைக்கழகம் மற்றும் சாய் பல்கலைக்கழகம் ஆகிய இரண்டு பல்கலைக்கழகங்களை அமைக்கும் மசோதாவை தமிழ்நாடு சட்டசபை ஏற்றுக் கொண்டிருக்கிறது.
  • சிவநாடார் பல்கலைக்கழகம் எஸ்எஸ்என் அறக்கட்டளையின் தொழிலதிபர் சிவ் நாடாரால் நிறுவப்பட இருக்கிறது.
  • சாய் பல்கலைக்கழகம் நாஸ்காம் நிறுவனர் மற்றும் வழிகாட்டியாளர் கே.வி. ரமணியால் நிறுவப்பட இருக்கிறது.
  • சட்டமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்த இரண்டு மசோதாக்களின் விதிமுறைகளின் படி இரண்டு பல்கலைக்கழகங்களும் சுயநிதி நிறுவனங்களாகும். மேலும் இப்பல்கலைக்கழகங்களுக்கு கல்லூரிகளை அமைக்கவும், பிராந்திய மையங்களை அமைக்கவும் மற்றும் வளாகங்கள் மற்றும் ஆய்வு மையங்களை அமைக்கவும் இம்மசோதாவின்படி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • தற்பொழுது தமிழகத்தில் தனியார் பல்கலைக்கழகங்கள் இல்லாததால், தமிழக அரசின் இரண்டு தனியார் பல்கலைக்கழகங்களை அமைக்கும் முடிவானது முக்கியத்துவம் பெறுகிறது. தனியார் பல்கலைக்கழகமாக இருந்த புகழ் பெற்ற அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் நிர்வாகப் பொறுப்பை தமிழக அரசு 2013 ஆம் ஆண்டு ஏற்றுக் கொண்டது. எனினும் தமிழகத்தில் ஏராளமான நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் உள்ளன.
  • இப்பல்கலைக்கழகங்கள் ஒவ்வொரு துறைப் படிப்பிலும் 35% சதவீத இடங்களை தமிழக மாணவர்களுக்காக ஒதுக்கீடு செய்ய வேண்டும். நடைமுறையில் இருக்கும் சட்டத்தின்படி வகுப்புரீதியிலான ஒதுக்கீட்டைத் தொடர்ந்து இந்த 35 சதவீத இட ஒதுக்கீட்டை இந்தப் பல்கலைக் கழகங்கள் மேற்கொள்ளலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்