கடல் மட்டம் உயர்வதால் தமிழ்நாட்டின் பிச்சாவரம் மற்றும் முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஹெக்டேர் பரப்பிலான சதுப்பு நிலங்கள் இழக்க நேரிடும் என்று சமீபத்திய ஆய்வு எச்சரிக்கிறது.
கடல் மட்ட உயர்வு காரணமாக முத்துப்பேட்டை மண்டலத்தில் 2,382 ஹெக்டேர் வரையிலான சதுப்புநிலக் காடுகளும், பிச்சாவரத்தில் 413 ஹெக்டேர்களும் 2100 ஆம் ஆண்டிற்குள் நீரில் மூழ்கக் கூடும்.
இந்தக் கடலோரக் காடுகளின் பெரும் இழப்பின் காரணமாக, முத்துப்பேட்டை மற்றும் பிச்சாவரம் பகுதிகளில் இருந்து 2.24 Tg (டெராகிராம்) கார்பன் வெளியிடப்பட்டு, பருவ நிலை மாற்றத்திற்குப் பங்களிக்கும் என்று ஆய்வு மதிப்பிடுகிறது.