தமிழ்நாடு அரசு ஆனது, "தமிழ்நாடு மாநிலத்தின் அருகி வரும் உயிரினங்களின் வளங்காப்பு நிதி" என்ற பிரத்யேக நிதியை உருவாக்கியுள்ளது.
இது பெரும் அழிவின் விளிம்பில் உள்ள பல்லுயிர்ப் பெருக்கத்தில் சிலவற்றை மீட்டு எடுப்பதற்காக 50 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு தொகுப்பு நிதியாக இருக்கும்.
அருகி வரும் மற்றும் மிகவும் அருகி வரும் உயிரினங்களைப் பாதுகாப்பதற்கான சில புதியத் திட்டங்களை உருவாக்குவதற்கு இந்த நிதி உதவும்.
2011 ஆம் ஆண்டில், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகம் ஆனது, தமிழ்நாட்டில் அழிவின் விளிம்பில் உள்ள 23 தாவர வகை இனங்கள் மற்றும் 16 விலங்கு இனங்களின் பட்டியலை அரசிதழில் வெளியிட்டது.