தமிழ்நாட்டில் குறைவான தனிநபர் வருமானம் கொண்ட மாவட்டங்கள்
May 8 , 2024 200 days 756 0
தமிழ்நாட்டில் 2019-20 ஆம் ஆண்டில் (2,36,783 ரூபாய்) இந்த மாநிலச் சராசரியை விட குறைவான தனிநபர் வருமானம் கொண்ட 19 மாவட்டங்கள் உள்ளன.
மீதமுள்ள 13 மாவட்டங்களின் தனிநபர் வருமானம் தொடர்பான புள்ளிவிவரங்கள் இந்த மாநிலத்தின் சராசரியை விட அதிகமாக உள்ளன.
சுமார் 3.64 லட்சம் தனிநபர் வருமானத்துடன் திருவள்ளூர் மாவட்டம் முதலிடத்திலும், ஈரோடு (3.57 லட்சம் ரூபாய்), கோவை (3.39 லட்சம் ரூபாய்) ஆகியவை அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.
அந்த ஆண்டில் இந்த மாவட்டங்களில், தெலுங்கானா, ஹரியானா மற்றும் கர்நாடகா உட்பட முக்கிய இந்திய மாநிலங்களையும் விட தனிநபர் வருமானம் அதிகமாக இருந்தது.
கடைசி இடங்களில் பெரம்பலூர் (ரூ. 1,07,731), திருவாரூர் (ரூ. 1,25,653), விழுப்புரம் (ரூ. 1,30,103) ஆகியவை உள்ளன.
ஆனால் இந்த மாவட்டங்களின் நிலைகள் அதே ஆண்டில் அசாம், பீகார், உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகியவற்றினை விட "அதிகமாக" இருந்தன.
இருப்பினும், அவை அந்த ஆண்டிற்கான 1.32 லட்சம் என்ற அகில இந்திய மதிப்பினை விட குறைவாகக் கொண்டுள்ளன.