அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் சென்னையில் பால்பரேஸ் கான்ட்ராரியஸ் எனப்படும் ஒரு பெரிய அளவிலான வளர்ச்சியடைந்த குழிநரி பூச்சியினைக் கண்டறிந்துள்ளனர்.
இது ஒரு தும்பி வகை பூச்சியினைப் போல் இருந்தாலும், அது ஒரு உணர் கொம்புகள் மற்றும் ஒரு தனித்துவமானச் சிறகடிக்கும் வகையிலான சிறகுகளையும் கொண்டு உள்ளதால் இந்த அம்சங்கள் இதனைத் தும்பி போன்ற ஒரு வகையிலிருந்து நன்கு வேறுபடுத்திக் காட்டுகிறது.
குழிநரிப் பூச்சிகள் என்பவை பெரும்பாலும் ஆப்பிரிக்கா, மியான்மர், தாய்லாந்து மற்றும் இலங்கையில் காணப் படுகின்றன மற்றும் ஒடிசா, மகாராஷ்டிரா, கர்நாடகா, மிசோரம், உத்தரகாண்ட் மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்றன.
சென்னை மாநகராட்சியின் பகுதியில் பல்பரேஸ் கான்ட்ராரியஸ் தென்பட்டுள்ளது தமிழகத்தில் ஒரு புதிய பதிவாகும்.