TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் சமக்ர சிக்சா

April 15 , 2025 4 days 69 0
  • மத்திய அரசானது, சமக்ர சிக்சா அபியான் (SSA) என்ற திட்டத்தின் கீழ் இது வரையில் தமிழ்நாடு மாநிலத்திற்கு 10,443 கோடி ரூபாய்க்கு மேல் நிதி வழங்கியுள்ளது.
  • SSA திட்டத்தின் கீழ் மத்திய அரசிடமிருந்து தமிழ்நாடு பெற்ற கடைசி நிதி தவணை ஆனது 2023-24 ஆம் நிதியாண்டில் 1,871 கோடி ரூபாய் ஆகும்.
  • அதன் பின்னர், 2020 ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கையின் விதிகளை தமிழ்நாடு ஏற்க மறுத்ததால், மத்திய அரசானது 2,152 கோடி ரூபாய் மதிப்பிலான தமிழகத்தின் பங்கினை நிறுத்தி வைத்துள்ளது.
  • 2018-19 ஆம் ஆண்டில், சர்வ சிக்சா அபியான் திட்டமானது மறுபெயரிடப்பட்டு SSA திட்டத்தில் இணைக்கப்பட்டது.
  • 2018-19 ஆம் ஆண்டில், மத்திய அரசு ஆனது தமிழ்நாட்டிற்கு 1,474 கோடி ரூபாய் நிதி வழங்கியது.
  • 2023-24 ஆம் ஆண்டில், இந்தத் திட்டத்தின் கீழ் மாநிலம் 1,871 கோடி ரூபாய் நிதியைப் பெற்றது என்பதோடு இது கடந்த ஐந்து ஆண்டுகளில் பதிவான 26% அதிகரிப்பு ஆகும்.
  • இந்த ஆண்டு மார்ச் மாதத்தில், மத்திய அரசு நிறுத்தி வைத்திருந்த 2,152 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு வழங்க முடிவு செய்தது.
  • NEP கொள்கையின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட மும்மொழிக் கொள்கையினைச் செயல் படுத்தத் தமிழக அரசு மறுத்ததாலும், PM-SHRI (PM Schools for Rising India) நிறுவுவது தொடர்பான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்திட்டதாலும் நிதி நிறுத்தம் மேற்கொள்ளப் பட்டதாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்