TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் சிறிய காற்றாலை விசையாழி

December 23 , 2024 2 days 53 0
  • திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சப்பூர் என்னுமிடத்தில் அமைக்கப்பட உள்ள ஒருங்கிணைந்தப் பேருந்து நிலையத்தில் (IBT) காற்றாலை விசையாழிகள் நிறுவப் பட உள்ளன.
  • மரங்களைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ள இந்த 30 அடி உயர சிறிய காற்றாலை விசையாழி கம்பங்கள் மின்சாரம் உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படுகின்றன.
  • இது மின்சாரம் தயாரிப்பதற்கு மணிக்கு 7 கிலோ மீட்டர் காற்றின் வேகம் தேவைப் படுகின்ற வழக்கமான காற்றாலை போன்றல்லாமல் இவை இயங்க சுமார் 2.5 கி.மீ வேகத்தில்  காற்று போதுமானது.
  • இந்தக் காற்றாலை விசையாழி கம்பம் ஆனது ஒரு மணி நேரத்திற்கு சுமார் 10 KW மின்னாற்றல் உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும், இதனால் மூலம் ஒரு நாளில் 240 KW மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.
  • இந்தப் பிராந்தியத்தில் உள்ள பகுதிகளில் இதுவே இம்மாதிரியிலான முதலாவதான சிறிய காற்றாலை விசையாழி ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்