TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் சிற்றாமைகளின் வலை அமைப்பு 2025

March 16 , 2025 15 days 52 0
  • தன்னார்வலர்கள் மற்றும் தமிழ்நாடு வனத்துறை ஆகியவை இணைந்து மாநிலம் முழுவதும் இதுவரையில் 2,53,719 ஆமை முட்டைகளைச் சேகரித்துள்ளனர் என்ற ஒரு நிலையில் இது கடந்த ஆண்டில் சேகரிக்கப்பட்ட சுமார் 2,58,907 என்ற மொத்த எண்ணிக்கையினை நெருங்குகிறது.
  • இது கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாகும்.
  • ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டக் கடற்கரைகளில் 1,200 க்கும் மேற்பட்ட ஆமைகள் உயிரிழந்து கரை ஒதுங்கின.
  • மார்ச் 11 ஆம் தேதி நிலவரப்படி, 89,784 முட்டைகள் சேகரிக்கப்பட்டுள்ளதுடன் கடலூர் முதலிடத்தில் உள்ளது.
  • அதைத் தொடர்ந்து 47,082 முட்டைகளுடன் சென்னை ப்பிரிவு இடம் பெற்றுள்ளது.
  • 73,728 முட்டைகளுடன் நாகப்பட்டினம் மூன்றாவது இடத்தில் உள்ளது.
  • விழுப்புரம் மற்றும் இராமநாதபுரம் ஆகிய பிரிவுகளில் முறையே 23,403 மற்றும் 18,073 முட்டைகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்