அடுத்த 12 மாதங்களுக்குள் மாநிலத்தின் காடுகளில் இருந்து ஊடுருவல் வகைகளைச் செடிகளில் ஒன்றான சீமையகத்திகள் (சென்னா ஸ்பெக்டபிலிஸ்) அகற்றப்படும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இது தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவிலிருந்துப் பெறப்பட்டு, அதன் பின்பு நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தில் (NBR) அறிமுகப்படுத்தப்பட்டது.
இது வேகமாக குறிப்பாக ஆழமான மண்ணில், வளரும் இனமாகும். நெருப்பு மற்றும் கரையான் எதிர்ப்புத் திறன் கொண்டது மற்றும் அதிக அமிலத் தன்மைக் கொண்ட மண்ணிலும் வளரக் கூடியது.
2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், தமிழ்நாடு ஊடுருவல் வகை தாவரங்கள் மற்றும் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு (TNPIPER) நிபுணர்கள் வனப் பகுதிகளில் 196 அயல்நாட்டு ஊடுருவல் வகை தாவர இனங்களைக் கண்டறிந்தனர் என்ற நிலையில் அவற்றில் 23 இனங்கள் 'முன்னுரிமை பெற்ற ஊடுருவல் இனங்கள் ஆகும்'.