இந்தியாவின் பெரிய மாநிலங்களில், 2017-18 மற்றும் 2021-22 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட ஐந்து கல்வியாண்டுகளில் உயர்கல்வியில் (கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்கள்) அதிக மொத்தச் சேர்க்கை விகிதத்தினைக் (GER) கொண்ட மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து திகழ்கிறது.
சமீபத்தில், கல்வித் துறை அமைச்சகத்தினால் வெளியிடப்பட்ட உயர்கல்வி குறித்த அகில இந்தியக் கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டின் மொத்தச் சேர்க்கை விகிதம் 47 சதவீதமாக இருந்தது.
மொத்தச் சேர்க்கை விகிதம் என்பது உயர்கல்வியில் சேர்ந்த மாணவர்களின் (18 முதல் 23 வயதிற்குட்பட்ட தகுதியுள்ள மக்கள்தொகை) எண்ணிக்கையைக் குறிக்கிறது.
2021-22 ஆம் ஆண்டிற்கான காலகட்டத்தில், அகில இந்திய சராசரி மொத்தச் சேர்க்கை விகிதம் ஆனது 28.4 சதவீதமாக இருந்தது.
அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில், சண்டிகர் 64.8 % என்ற அளவில் மொத்தச் சேர்க்கை விகிதத்தினைக் கொண்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து 61.5 சதவீதத்துடன் புதுச்சேரியும், 49 சதவீதத்துடன் டெல்லியும் இடம் பெற்றுள்ளன.
இமாச்சலப் பிரதேசம் (43.1 சதவீதம்), உத்தரகாண்ட் (41.8 சதவீதம்), கேரளா (41.3 சதவீதம்) மற்றும் தெலுங்கானா (40 சதவீதம்) ஆகிய மாநிலங்கள் சிறப்பான செயல் திறனைக் கொண்டுள்ளன.