தமிழ்நாடு மாநிலத்தில், எண்ணிக்கையில் அதிகரித்து வரும் செல்வ வளம் நிறைந்த மக்கள் மத்தியில் சொகுசு கார்களின் பதிவு உயர்ந்து வருகிறது.
2023-24 ஆம் ஆண்டில், 30 லட்சம் ரூபாய் விலை மதிப்புள்ள 8,475 கார்கள் மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்ற நிலையில் இது 2022-23 ஆம் ஆண்டில் இருந்த 5,797 கார்கள் என்ற எண்ணிக்கையினை விட சுமார் 46.2% அதிகமாகும்.
2020-21 ஆம் ஆண்டில் 2,816 கார்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 2021-22 ஆம் ஆண்டில் 3,954 கார்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன.
2019-2020 ஆம் ஆண்டில் 4,187 கார்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன.
சென்னை மண்டலத்தில் மட்டும் 2023-24 ஆம் ஆண்டில் 1,668 சொகுசு ரக கார்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன.
அதைத் தொடர்ந்து கோவை மண்டலத்தில் 510 கார்கள், மதுரை மண்டலத்தில் 110; திருநெல்வேலி மண்டலத்தில், 95; மற்றும் திருச்சி மண்டலத்தில், 65 கார்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன.