TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் பாம்புக்கடிப் பாதிப்புகள் குறித்த தரவு

December 2 , 2024 25 days 95 0
  • இது சமமற்ற முறையில் நாட்டின் மிகவும் எளிதில் பாதிக்கப்படக் கூடிய மக்களையே அதிகம் பாதிக்கிறது என்பதால் பாம்புக்கடி என்பது "ஏழைகளின் நோய்" ஆகும்.
  • கட்டு விரியன், இந்திய நாகப்பாம்பு, கண்ணாடி விரியன் பாம்பு மற்றும் சுருட்டை விரியன் ஆகியவை கூட்டாக நான்கு பெரும் பாம்பினங்கள் (Big four) என்று அழைக்கப் படுகின்றன.
  • இந்தியாவில் ஏறத்தாழ 90% பாம்புக்கடி நிகழ்வுகளுக்கு இந்தப் பாம்புகளே காரணம் ஆகும்.
  • ஒரு புதிய விதிமுறையின் கீழ், இனி அனைத்து மருத்துவமனைகளும் - பொது மற்றும் தனியார் – தற்போது பாம்புக்கடிப் பாதிப்புகள் குறித்து மாநில சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும்.
  • இந்த ஆண்டின் ஜூன் மாதம் வரையில் தமிழகத்தில் 7,300 பாம்புக்கடிப் பாதிப்புகள் பதிவாகி 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • கடந்த ஆண்டு 43 உயிரிழப்புகளுடன் 19,795 பாதிப்புகளும், 2022 ஆம் ஆண்டில் 17 உயிரிழப்புகளுடன் 15,120 பாதிப்புகளும் பதிவாகியுள்ளன.
  • மில்லியன் உயிரிழப்பு ஆய்வு (2001-2014) அடிப்படையிலான ஓர் ஆய்வு ஆனது, ஒவ்வோர் ஆண்டும் சுமார் 58,000 பேர் பாம்புக்கடியால் உயிரிழப்பதாக மதிப்பிட்டு உள்ளதோடு இது மருத்துவமனைகளால் அறிவிக்கப்பட்ட ஒரு அதிகாரப்பூர்வப் புள்ளி விவரங்களை விட அதிகமாகும்.
  • இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாம்புக்கடியை அறிவிக்கக்கூடிய நோயாக அறிவித்த முதல் மாநிலமாக கர்நாடகா ஆகும்.
  • 1939 ஆம் ஆண்டின் தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டத்தின் கீழ், பாம்புக் கடி மூலமான விஷமேற்றத்தினை அறிவிக்கக்கூடிய நோயாக தமிழ்நாடு மாநிலம் அறிவித்தது.
  • இந்திய அரசாங்கம் ஆனது பாம்புக்கடி நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான தேசிய செயல் திட்டத்தை (NAPSE) அறிமுகப்படுத்தியது.
  • உலக சுகாதார அமைப்பானது, ஏற்கனவே பாம்புக்கடியால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் குறைபாடுகளைக் கட்டுப்படுத்துவதற்காக உலகளாவிய உத்தியை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • தேசிய செயல்திட்டம் ஆனது 2030 ஆம் ஆண்டிற்குள், ஒரு சுகாதார அணுகுமுறை மூலம் பாம்புக் கடியினால் ஏற்படும் உயிரிழப்புகளைப் பாதியாகக் குறைப்பதை ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்