தமிழ்நாட்டில் பாம்புக்கடிப் பாதிப்புகள் குறித்த தரவு
December 2 , 2024 42 days 119 0
இது சமமற்ற முறையில் நாட்டின் மிகவும் எளிதில் பாதிக்கப்படக் கூடிய மக்களையே அதிகம் பாதிக்கிறது என்பதால் பாம்புக்கடி என்பது "ஏழைகளின் நோய்" ஆகும்.
கட்டு விரியன், இந்திய நாகப்பாம்பு, கண்ணாடி விரியன் பாம்பு மற்றும் சுருட்டை விரியன் ஆகியவை கூட்டாக நான்கு பெரும் பாம்பினங்கள் (Big four) என்று அழைக்கப் படுகின்றன.
இந்தியாவில் ஏறத்தாழ 90% பாம்புக்கடி நிகழ்வுகளுக்கு இந்தப் பாம்புகளே காரணம் ஆகும்.
ஒரு புதிய விதிமுறையின் கீழ், இனி அனைத்து மருத்துவமனைகளும் - பொது மற்றும் தனியார் – தற்போது பாம்புக்கடிப் பாதிப்புகள் குறித்து மாநில சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும்.
இந்த ஆண்டின் ஜூன் மாதம் வரையில் தமிழகத்தில் 7,300 பாம்புக்கடிப் பாதிப்புகள் பதிவாகி 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஆண்டு 43 உயிரிழப்புகளுடன் 19,795 பாதிப்புகளும், 2022 ஆம் ஆண்டில் 17 உயிரிழப்புகளுடன் 15,120 பாதிப்புகளும் பதிவாகியுள்ளன.
மில்லியன் உயிரிழப்பு ஆய்வு (2001-2014) அடிப்படையிலான ஓர் ஆய்வு ஆனது, ஒவ்வோர் ஆண்டும் சுமார் 58,000 பேர் பாம்புக்கடியால் உயிரிழப்பதாக மதிப்பிட்டு உள்ளதோடு இது மருத்துவமனைகளால் அறிவிக்கப்பட்ட ஒரு அதிகாரப்பூர்வப் புள்ளி விவரங்களை விட அதிகமாகும்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாம்புக்கடியை அறிவிக்கக்கூடிய நோயாக அறிவித்த முதல் மாநிலமாக கர்நாடகா ஆகும்.
1939 ஆம் ஆண்டின் தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டத்தின் கீழ், பாம்புக் கடி மூலமான விஷமேற்றத்தினை அறிவிக்கக்கூடிய நோயாக தமிழ்நாடு மாநிலம் அறிவித்தது.
இந்திய அரசாங்கம் ஆனது பாம்புக்கடி நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான தேசிய செயல் திட்டத்தை (NAPSE) அறிமுகப்படுத்தியது.
உலக சுகாதார அமைப்பானது, ஏற்கனவே பாம்புக்கடியால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் குறைபாடுகளைக் கட்டுப்படுத்துவதற்காக உலகளாவிய உத்தியை அறிமுகப் படுத்தியுள்ளது.
தேசிய செயல்திட்டம் ஆனது 2030 ஆம் ஆண்டிற்குள், ஒரு சுகாதார அணுகுமுறை மூலம் பாம்புக் கடியினால் ஏற்படும் உயிரிழப்புகளைப் பாதியாகக் குறைப்பதை ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.