தமிழ்நாடு மாநிலத்தின் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள சக்கரக்கோட்டை மற்றும் தேர்த்தங்கல் ஆகிய இரண்டு பறவைகள் சரணாலயங்கள் தற்போது ராம்சர் தளங்கள் என்று அங்கீகரிக்கப் பட்டுள்ளன.
இதன் மூலம், நமது மாநிலத்தில் உள்ள ராம்சர் தளங்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது என்பதோடு இதன் மூலம் இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான ராம்சர் தளங்கள் கொண்ட மாநிலமாக தமிழகம் தொடர்ந்து இடம் பெற்றுள்ளது.
அதைத் தொடர்ந்து 10 தளங்களுடன் உத்தரப் பிரதேசம் இடம் பெற்றுள்ளது.
இராமநாதபுர மாவட்டம் சித்திரங்குடி மற்றும் கஞ்சிரன்குளம் ஆகிய இதர இரண்டு ராம்சர் சரணாலயங்களைக் கொண்டுள்ளது.
இந்தியாவின் மற்ற 2 புதியத் தளங்கள் கெச்சியோபால்ரி ஈரநிலம் (சிக்கிம்), மற்றும் உத்வா ஏரி (ஜார்க்கண்ட்) ஆகியனவாகும்.
இவ்வாறு, தற்போது இந்தியா மொத்தம் 89 ராம்சர் தளங்களைக் கொண்டுள்ளது.
2002 ஆம் ஆண்டில் கோடியக்கரை வனவிலங்கு மற்றும் பறவைகள் சரணாலயத்தின் மூலம் தமிழ்நாடு மாநிலமானது அதன் முதல் ராம்சர் அந்தஸ்தினைப் பெற்றது.