முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னையில் தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி மையத்தைத் திறந்து வைத்தார்.
இது டசால்ட் சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நிறுவப்பட்டது.
இது மாநிலத்தினால் திட்டமிடப்பட்ட மூன்று சிறப்பு மையங்களில் ஒன்றாகும்.
சீமென்ஸ் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு திறன்மிகு மற்றும் மேம்பட்ட உற்பத்தி மையம் மற்றும் தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி மையம் ஆகியவை மற்ற இரண்டுப் பூங்காக்களாகும்.
மேற்கொண்ட நிறுவனங்கள் GE Aviation நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட உள்ளது.
மேலும் அவர் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஓசூரில் இரண்டு தொழில்துறைப் புத்தாக்க மையங்களை (IICs) நிறுவினார்.
இது நான்காவது தொழில்புரட்சியை ஏற்படுத்துவதையும், தமிழ்நாட்டின் உற்பத்திச் சூழல் அமைப்பை மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
விழுப்புரம் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் டைடல் நியோ பூங்காக்களை நிறுவச் செய்வதற்கும் முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
இன்ஃபோசிஸ், சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் மற்றும் நாட்டிங்ஹாம் பல்கலைக் கழகத்துடன் இணைந்துத் தொழில்துறை 4.0 முதிர்வுக் குறியீட்டு ஆய்வையும் முதல்வர் அவர்கள் தொடங்கி வைத்தார்.