நீலகிரி வன நிலப்பரப்பில் உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான புலிகள் உள்ளன.
கேரளா மற்றும் தமிழ்நாட்டிற்கு இடையே பெரியாறு - மேகமலை பகுதி மற்றும் ஆனைமலை - பரம்பிக்குளம் பகுதியில் தொடர்ச்சியாகக் காடுகள் பரவிக் காணப் படுகின்றன.
2022 ஆம் ஆண்டிற்கான தேசிய புலிகள் வளங்காப்பு ஆணையத்தின் (NTCA) நாடு தழுவிய புலிகள் கணக்கெடுப்பில் தமிழ்நாட்டில் 306 புலிகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
இந்த எண்ணிக்கையானது 2018 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் கண்டறியப்பட்ட 264 பெரும்பூனை இனங்களை விட அதிகமாகும்.
கடந்த இருபது ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்து உள்ளது.
இந்தியாவில் மேற்கொள்ளப்படும் புலிகள் வளங்காப்புத் திட்டத்தினை இரண்டு கட்டங்களாகப் பிரிக்கலாம்.
முதல் கட்டம் ஆனது 1970 ஆம் ஆண்டுகளில் தொடங்கப்பட்டது.
இது வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளை நிறுவுதல் ஆகியவற்றை உள்ளடக்கியது.
இரண்டாம் கட்டம் ஆனது 2005-2006 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
இந்த காலக் கட்டத்தில், அரசாங்கமானது ஒரு நிலப்பரப்பு சார்ந்த அணுகுமுறையைப் பின்பற்றியதோடு, புலிகளின் வளங்காப்பிற்காக ஒரு கடுமையான கண்காணிப்பைச் செயல்படுத்தியது.
2018 ஆம் ஆண்டில் புலிகளின் எண்ணிக்கை 981 ஆகவும், 2022 ஆம் ஆண்டில் 824 இந்தப் பகுதியிலேயே வசிக்கும் புலிகள் இருப்பதாகவும் மதிப்பிடப் பட்டுள்ளது.