TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் பொதுத்துறை நிறுவனங்களின் இழப்புகள்

December 14 , 2024 8 days 72 0
  • 2021-22 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் (GoTN) 68 பொதுத்துறை நிறுவனங்களில் (PSU) சுமார் 30 நிறுவனங்கள் நஷ்டத்தை/ இழப்பினை எதிர்கொண்டுள்ளன.
  • ஆனால், 2020-21 ஆம் ஆண்டில் சுமார் 25,476.43 கோடி ரூபாயாக இருந்த பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்பு ஆனது 2021-22 ஆம் ஆண்டில் சுமார் 22,192.94 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
  • தமிழ்நாடு அரசின் மேம்பட்ட உற்பத்திக்கான சிறப்பு மையம் என்ற ஒரு புதிய பொதுத் துறை நிறுவனமும் அதன் செயல்பாட்டின் முதல் ஆண்டில் இழப்பினை மட்டுமே எதிர் கொண்டது.
  • மொத்த இழப்பில், மின்சாரத் துறையில் மூன்று பொதுத்துறை நிறுவனங்கள் 15,357.90 கோடி ரூபாய் பங்கினையும், மாநிலப் போக்குவரத்துத் துறையில் எட்டு பொதுத்துறை நிறுவனங்கள் 6,622.19 கோடி ரூபாய் பங்கினையும் கொண்டுள்ளன.
  • சுமார் 10 பொதுத்துறை நிறுவனங்களில் சுயாதீன இயக்குநர்களின் பிரதிநிதித்துவம் தேவையான எண்ணிக்கையை விட குறைவாக இருந்தது.
  • இரண்டு பொதுத்துறை நிறுவனங்களின் இயக்குநர்கள் குழுவில் பெண் இயக்குநர்கள் இல்லை.
  • மேலும் ஆறு பொதுத்துறை நிறுவனங்களில், பொதுத்துறை நிறுவனங்களின் பொதுக் கூட்டங்களில் சுயேச்சையான இயக்குநர்கள் கலந்து கொள்ளவில்லை.
  • மேலும் இரண்டு பொதுத்துறை நிறுவனங்களில் தணிக்கைக் குழு அமைக்கப் பட வில்லை என்பதோடு தணிக்கைக் குழுவின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் 13 பொதுத்துறை நிறுவனங்களில் சுயாதீன இயக்குநர்களாக இல்லை.
  • 22 பொதுத்துறை நிறுவனங்களில் நியமனம் மற்றும் ஊதியக் குழு ஏதும் அமைக்கப்பட வில்லை.
  • 12 பொதுத்துறை நிறுவனங்களில் இடித்துரைப்பாளர் செயல்முறை இல்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்