தமிழ்நாட்டில் பொதுப் பயன்பாட்டு மின்சார வாகன மின்னேற்ற நிலையங்கள்
January 7 , 2025 9 days 75 0
தமிழ்நாட்டின் பொதுப் பயன்பாட்டு மின்சார வாகன மின்னேற்ற நிலையங்கள் ஆனது, 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் மாதம் வரையில் 8.77 மில்லியன் அலகு மின்சாரத்தினைப் பயன்படுத்தியுள்ளது.
ஆனால் இந்த நுகர்வு ஆனது, மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் ஒப்பீட்டளவில் குறைவாகும்.
வாகன மின்னேற்ற நிலையங்களில் மிக அதிகபட்சமாக 206.23 MU மின்சார நுகர்வுடன் டெல்லி முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா (108.13 MU) மற்றும் குஜராத் (36.34 MU) ஆகியவை உள்ளன.
சுமார் 40% மின்சார நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் நாட்டில் விற்கப்படும் 70% மின்சார இருசக்கர வாகனங்கள் நம் தமிழக மாநிலத்திலேயே தயாரிக்கப்படுவதால் தமிழ்நாடு மின்சார வாகனங்களின் மையமாக உள்ளது.
சுமார் 5.05% பயன்பாட்டுப் பரவலுடன் 2024 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் மின்சார வாகன விற்பனையானது 92,978 அலகுகளாக இருந்தது.
2024 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில் 5.58% பயன்பாட்டு விகிதத்துடன் மின்சார இரு சக்கர வாகனங்கள் ஆனது சுமார் 79,849 அலகுகள் விற்பனையாகி அதிக விற்பனையான வாகனங்களாக உள்ளன.