தமிழ்நாட்டில் மகாவீரரின் சிலை
February 19 , 2024
280 days
547
- விருதுநகர் மாவட்டம் திருச்சுளி அருகே உள்ள மணவராயனேந்தலில் 1,000 ஆண்டுகள் பழமையான தீர்த்தங்கார மகாவீரரின் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
- சிற்ப நுட்பத்தின் அடிப்படையில், இந்த சிலையானது கி.பி. 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
- கிரானைட் கற்களால் ஆன இந்த சிலையானது நுணுக்கமான உருவ அமைப்புகள் கொண்டு செதுக்கப் பட்டுள்ளது.
- இருபுறமும் மகர-தோரணங்கள் கொண்ட (புராண கால உயிரினங்களுடன் கூடிய நுழைவு வாயில் வளைவுகள்) சிம்மாசனத்தில் மகாவீரர் அமர்ந்திருப்பதை இது சித்தரிக்கிறது.
- அவரது தலைக்கு மேலே ஒரு மூன்று குடை உள்ள நிலையில், அதில் படர்கொடிகள் செதுக்கப் பட்டுள்ளன.
Post Views:
547