TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் லுட்விஜியா பெருவியானா

July 26 , 2023 492 days 292 0
  • லுட்விஜியா பெருவியானா என்பது பெரு உள்ளிட்ட மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் காணப்படும் நீர்வாழ் கலைச்செடி இனமாகும்.
  • இது தமிழ்நாட்டின் ஒரு மலைவாழ் பகுதியான வால்பாறையில் உள்ள யானைகளின் வாழ்விடங்களையும், அவற்றின் உணவு தேடும் பகுதிகளையும் அழிக்கும் வகையில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.
  • இது உள்ளூரில் வயல்கள் என்று அழைக்கப்படும் மலைவாழ்ப் பகுதிகளில் உள்ள ஈர நிலங்களின் பெரும்பாலான பகுதிகளில் பரவிக் காணப் படுகிறது.
  • இது யானைகள் மற்றும் காட்டெருது உள்ளிட்ட இன்ன பிற வன விலங்குகள் விரும்பி உண்ணும் புல் மற்றும் பூர்வீகத் தாவர வகைகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது.
  • லுட்விஜியா தமிழ்நாட்டில் உள்ள 22 முதன்மையான ஆக்கிரமிப்பு (பூர்வீகம் சாராத) தாவர இனங்களில் ஒன்றாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்