2022-23 ஆம் நிதியாண்டில் (FY) தமிழ்நாட்டின் முறைசார் தொழில் துறையில் 14,05,171 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இது 2021-22 நிதியாண்டில் உருவாக்கப்பட்ட 12,84,986 வேலைவாய்ப்புகளை விட சுமார் 9.4% அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில், 2022-23 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட 3,76,872 வேலை வாய்ப்புகளில் 18 முதல் 21 வயதுக்குட்பட்டவர்களின் சேர்க்கையானது அதிகபட்சமாக காணப்பட்டது.
22 முதல் 25 வயதுப் பிரிவில், 2022-23 ஆம் ஆண்டில் 3,6,8981 வேலைவாய்ப்புகள் சேர்க்கப் பட்டுள்ள நிலையில் அதைத் தொடர்ந்து 35 வயதுக்கு மேற்பட்டவர் பிரிவில் 2,44,891 வேலை வாய்ப்புகள் சேர்க்கப்பட்டன.
மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா, ஹரியானா மற்றும் குஜராத் ஆகியவை மார்ச் மாதத்தில் நிகர ஆட்சேர்க்கையில் முன்னணியில் உள்ள முதல் ஐந்து மாநிலங்களாகும்.
ஒட்டு மொத்த நிகர ஆட்சேர்க்கையில் இந்த மாநிலங்களின் பங்கானது 58.68% ஆக இருந்தது.
2021-22 ஆம் ஆண்டில் 10.5% ஆக இருந்த ஒட்டுமொத்த நிகர ஆட்சேர்க்கையில் தமிழகத்தின் பங்கானது 2022-23 ஆம் ஆண்டில் 10.1% ஆகக் குறைந்துள்ளது.