தமிழ்நாட்டில் ‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’ திட்டம்
December 8 , 2024 36 days 150 0
‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’ (ONOR) என்ற திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு உணவு தானியங்கள் ஒதுக்கீடு எதுவும் வழங்கப்படவில்லை.
பொதுவாக அத்தகைய அட்டைதாரர்களுக்கு, மாநில அரசினால் வழங்கப் படுகின்ற ஒதுக்கீட்டை விட அதிகமாக 5% உணவு தானியங்கள் ஒதுக்கப்படும்.
2023-24 ஆம் ஆண்டில் 13.816 டன் உணவு தானியங்கள் - 13.263 டன் அரிசி மற்றும் 0.553 டன் கோதுமை – மாநிலத்திற்காக ஒதுக்கப்பட்டது.
நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில், மாநிலங்களுக்கு இடையே ஒரே அட்டைகளைப் பயன்படுத்துதல் வசதியின் கீழ் மாநிலத்தில் சுமார் 22.8 டன் கோதுமை மற்றும் 0.036 டன் அரிசி விநியோகிக்கப்பட்டுள்ளது.
தமிழக மாநிலம் ஆனது ஒவ்வொரு மாதமும் சராசரியாக சுமார் 65,000 டன் அரிசியைப் பெறுகிறது.
கோதுமையைப் பொறுத்தவரையில், மத்திய அசரானது ஒரு மாதத்திற்கு சுமார் 8,575 டன்களை வழங்குகிறது.
கூடுதலாக, வெளிச்சந்தை விற்பனைத் திட்டத்தின் கீழ் தேசியக் கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பிலிருந்து (NCCF) ஒவ்வொரு மாதமும் மேலும் 8,500 டன் அரிசியை மாநில அரசு கொள்முதல் செய்கிறது.