தமிழ்நாட்டில் மொத்தம் 6.26 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
இதில் 3.18 கோடி பெண்கள், 3.08 கோடி ஆண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த 7,200க்கும் மேற்பட்டவர்கள் ஆகியோர் அடங்குவர்.
இம்மாநிலத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் உள்ளனர் (6,94,845 வாக்காளர்கள்).
சென்னையில் உள்ள துறைமுகச் சட்டமன்றத் தொகுதியானது மிகக் குறைந்த வாக்காளர்களை (1,76,272 வாக்காளர்கள்) கொண்டுள்ளது.
தற்போதைய அரசாங்கத்தின் பதவிக் காலம் 2021 ஆம் ஆண்டின் மே 2 ஆம் தேதியுடன் முடிவடைவதால், தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் மே மாதத்தில் நடைபெறும்.