2017-2018ஆம் ஆண்டில் தமிழ்நாடு 8.09 சதவிகித அளவிற்கு பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளது. தமிழ்நாட்டுப் பொருளாதாரம் 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் பண விலக்கல் நடவடிக்கையின் விளைவுகளிலிருந்தும், 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பின் விளைவுகளிலிருந்தும் மீண்டது.
இதற்கு மூல காரணம் விவசாயம் மற்றும் அது சார்ந்த நடவடிக்கைகளில் ஏற்பட்ட இரட்டை இலக்க வளர்ச்சி விகிதமும், அதற்கு உறுதுணை புரிந்த மற்ற இரண்டு துறைகளான தொழிற்துறையும் சேவைத்துறையும் ஆகும்.
விவசாயத்துறை 15.1 சதவிகிதமும், தொழிற்துறை 7.75 சதவிகிதமும் சேவைத் துறை 6.55 சதவிகிமும் வளர்ச்சி கண்டது.