TNPSC Thervupettagam

தமிழ்நாட்டைச் சேர்ந்த வெளிநாட்டுத் தொழிலாளர்கள்

April 4 , 2021 1390 days 773 0
  • கடந்த ஐந்தாண்டுகளில் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குப் பணிக்குச் செல்லும் 10 நபர்களுள் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக உள்ளார்.
  • இக்காலகட்டத்தில் அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிய இரண்டாவது மாநிலம் தமிழ்நாடாகும்.
  • தொழிலாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதில் முதலிடத்தில் கேரள மாநிலம் உள்ளது.
  • 2016 ஆம் ஆண்டு ஜனவரி  முதல் 2021 ஆம் ஆண்டு மார்ச் 18 வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாட்டிலிருந்து 13.1 லட்சம் மக்கள் வேலைக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்.
  • அதே காலகட்டத்தில் கேரள மாநிலத்திலிருந்து 1.9 மில்லியன் மக்கள் வேலைக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்.
  • கடந்த ஐந்தாண்டுகளில் நாடு முழுவதும் வேலை தேடும் 1.3 கோடி மக்களின் மொத்த எண்ணிக்கையில் கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் பங்கு மட்டும் ஏறத்தாழ 24% ஆகும்.
  • சுமார் 12.6 லட்சம் மக்கள் உத்தரப் பிரதேசத்திலிருந்து வெளிநாடுகளுக்கு வேலைக்காக சென்றுள்ளனர்.
  • இந்தத் தரவுகள் மாநிலங்களவையில் மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் V. முரளிதரன் அவர்களால் சமர்ப்பிக்கப் பட்டது.

குறிப்பு

  • 4.7 லட்சம் மக்கள் வந்தே பாரத் என்ற திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திரும்பியுள்ளனர்.
  • பெருந்தொற்றின் போது உலகம் முழுவதும் சிக்கிக் கொண்டு துன்பத்தில் தவித்த இந்தியர்களை நாடு திரும்பச் செய்வதினை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்