தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் நோக்கத்தைத் தமிழக அரசு விரிவுபடுத்தி உள்ளது.
தற்போது, மாநிலம் முழுவதும் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களும் இத்திட்டம் மூலம் பயனடைவர்.
தமிழ்ப் புதல்வன் திட்டத்திற்கு 360 கோடி ரூபாய் வழங்க அரசு நிதி ஒப்புதல் அளித்து உள்ளது.
2024-25 ஆம் ஆண்டில் 3.28 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் திட்டமானது, மாநில அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்து, உயர்கல்வி செல்லும் ஒவ்வொரு பெண்களுக்கும் மாதந்தோறும் 1,000 ரூபாய் உதவித் தொகை வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தினை ஒன்றியுள்ளது.