TNPSC Thervupettagam

தயானந்த சரஸ்வதி அவர்களின் 200வது பிறந்தநாள் (1824-1883)

February 17 , 2023 520 days 334 0
  • தயானந்த சரஸ்வதி அவர்கள், 1824 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதியன்று பிறந்தார்.
  • ஒரு சமூக சீர்திருத்தவாதியான அவர் அந்தக் காலத்தில் நிலவிய சமூக ஏற்றத் தாழ்வுகளை எதிர்த்துப் போராடுவதற்காக 1875 ஆம் ஆண்டில் ஆர்ய சமாஜம் என்ற அமைப்பினை நிறுவினார்.
  • ஒரு ஏகத்துவ இந்து ஒழுங்கமைப்பான இது மரபுவழி இந்து மதத்தின் சடங்கு சார்ந்த அத்துமீறல்கள் மற்றும் சமூகக் கோட்பாடுகளை நிராகரித்து மற்றும் வேதப் போதனைகளின் அடிப்படையிலான ஒன்றுபட்ட இந்துச் சமுதாயத்தை உருவாக்கச் செய்வதனை ஊக்குவித்தது.
  • சமூகச் சீர்திருத்தங்கள் மற்றும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தல் ஆகியவற்றின் மூலம் நாட்டின் கலாச்சாரம் மற்றும் சமூக விழிப்புணர்வில் ஆர்ய சமாஜம் முக்கியப் பங்கு வகித்துள்ளது.
  • அவரது மகத்தானப் படைப்பான சத்யார்த் பிரகாஷ் (1875), "வேதக் கொள்கைகளுக்குத் திரும்புவதை" வலியுறுத்தியது.
  • இஸ்லாமிய அல்லது கிறித்தவ மதத்திற்கு மாறியவர்களை மீண்டும் இந்து மதத்திற்கு கொண்டு வருவதற்கான சுத்தி என்ற கருத்தை அவர் ஆதரித்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்