சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்கள் 1824 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதியன்று குஜராத்தில் மூல சங்கர் திவாரி என்ற பெயரில் பிறந்தார்.
அவர் 'சத்யார்த் பிரகாஷ்' என்ற தனது முதல் படைப்பிற்காகப் புகழ் பெற்றார்.
1875 ஆம் ஆண்டில், அப்போது நிலவியச் சமூக ஏற்றத்தாழ்வுகளை களைய வேண்டி ஆரிய சமாஜத்தை நிறுவினார்.
சமூகச் சீர்திருத்தங்கள் மற்றும் கல்விக்கு முக்கியத்துவம் அளித்ததன் மூலம் நாட்டின் கலாச்சார மற்றும் சமூக விழிப்புணர்வில் ஆரிய சமாஜம் முக்கியப் பங்கு வகித்தது.