TNPSC Thervupettagam

தயாபர் காற்றாலை திட்டம்

November 9 , 2023 255 days 201 0
  • தேசிய அனல் மின் கழகத்தின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் லிமிடெட் (NTPC REL) நிறுவனமானது, குஜராத்தின் கச் பகுதியில் உள்ள தயாபர் எனுமிடத்தில் அமைந்த 50 மெகாவாட் திறன் கொண்ட தனது முதல் காற்றாலை திட்டத்தின் வணிக ரீதியிலான செயல்பாட்டைத் தொடங்கியது.
  • தயாபர் காற்றாலை ஆனது, NTPC REL நிறுவனத்தின் முதல் மற்றும் இந்தியாவில் வணிக ரீதியாக அறிவிக்கப்பட்ட முதல் காற்றாலை திட்டம் ஆகும்.
  • இதன் மூலம், NTPC குழுமத்தின் மொத்த நிறுவப்பட்ட திறன் 73,874 மெகாவாட்டாக உயர்ந்துள்ளதோடு அந்தக் குழுமத்தின் மொத்தப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் தற்போது 3,364 மெகாவாட்டாகவும் உள்ளது.
  • தயாபர் காற்றாலையைத் தவிர, மொத்தம் 6,210 மெகாவாட் திறன் கொண்ட 15 புதுப்பிக்கத் தக்க ஆற்றல் திட்டங்கள் பல்வேறு கட்ட செயல்பாடுகளில் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்