TNPSC Thervupettagam

தரம் குறைந்த நிலத்தின் புத்துயிராக்கம் - 50 லட்சம் ஹெக்டேர் நிலங்கள்

August 29 , 2019 1917 days 584 0
  • 2021 மற்றும் 2030 ஆகிய காலகட்டத்திற்கு இடையே 50 லட்சம் ஹெக்டேர் (5 மில்லியன்) தரம் குறைந்த நிலங்களைப் புத்துயிராக்கம் செய்ய இந்தியா உறுதி பூண்டுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.
  • இந்தியாவில் சுமார் 29% (சுமார் 96.4 மில்லியன் ஹெக்டேர்) நிலங்கள் தரம் குறைந்த நிலங்களாகக் கருதப்படுகிறது.
  • 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், இந்தியா “பான் சவாலின்” ஒரு பகுதியாக உருவெடுத்துள்ளது.
  • பான் சவால் என்பது 2020 ஆம் ஆண்டில் உலகின் 150 மில்லியன் ஹெக்டேர் அழிக்கப்பட்ட காடுகளையும் தரம் குறைந்த நிலங்களையும் 2030 ஆம் ஆண்டில் 350 மில்லியன் ஹெக்டேர் நிலங்களையும் மீட்டெடுப்பதற்கான ஒரு உலகளாவிய முயற்சியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்