மத்திய நிதி அமைச்சகம் மற்றும் மத்திய பெருநிறுவன விவகாரத் துறை அமைச்சகமானது தேசிய பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு தரவு இணையவாயில் (National Corporate Social Responsibility Data Portal) மற்றும் பெருநிறுவன தரவு இணையவாயிலை (Corporate Data Portal) தொடங்கியுள்ளன.
பெருமளவில் பொதுவெளியில் பெருநிறுவனங்களின் செயல்பாட்டில் வெளிப்படைத் தன்மையையும் (transparency) மற்றும் பொறுப்புணர்வையும் (Accountability) கொண்டு வந்து அவற்றை மேம்படுத்துவதற்காக இவ்விரு இணையவாயில்கள் தொடங்கப்பட்டுள்ளன.
பெருநிறுவனங்களுடைய CSR திட்டங்களின் சமூக தணிக்கைக்கு (Social Audit of CSR) உதவி புரிவதோடு, CSR-ன் பங்களிப்பாளர்கள். செயல்படுத்திகள் மற்றும் பயனாளர்களை ஒருங்கிணைக்கவும், தேசத்தின் வளர்ச்சி மேம்பாட்டு இலக்குகளோடு (National Development Coals) CSR திட்டங்களின் செயல்பாடுகளை ஒத்திசைப்பதற்கும் இந்த இணையவாயில்கள் உதவும்.