அமெரிக்க தொழில்நுட்ப தொழிலக குழுக்களானது இந்தியாவின் “தரவுகளை உள்ளூர் மயமாக்கல்" திட்டத்திற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளன.
இது ஆய்வு மற்றும் செலவுகளை அதிகரிக்கும் என அவர்கள் ஐயப்படுகின்றனர்.
ரிசர்வ் வங்கியானது 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தரவுகளின் உள்ளூர் மயமாக்கலுக்கான உத்தரவுகளை வழங்கியது.
இந்த உத்தரவானது 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாத்திற்குள் அனைத்து உலகளாவிய மற்றும் உள்ளூர் பணவழங்கீட்டு நிறுவனங்கள் அவற்றின் தரவு சேமிப்பு கட்டமைப்புகளை இந்தியாவிற்குள் அமைப்பதை கட்டாயமாக்குகிறது.
பெரும்பாலான பெருநிறுவனங்கள் இன்னும் இந்த விதிமுறைகளைப் பூர்த்தி செய்யவில்லை.
தரவு தனியுரிமை குறித்த N. ஸ்ரீகிருஷ்ணா குழுவானது அனைத்து “முக்கியமான தனிப்பட்ட தரவுகளும்” கட்டாயமாக நாட்டிற்குள்ளேயே செயல்படுத்தப்படவேண்டும் என பரிந்துரை செய்தது.