தேசிய பேரிடர் அபாயக் குறைப்பு தரவுத்தளத்தின் (Disaster Risk Reduction Database) மீதான 2 நாள் பயிற்சிப் பட்டறை புதுதில்லியில் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
இந்த பயிற்சிப் பட்டறையானது தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் பின்வருவனவற்றுடன் கூட்டிணைந்து நடத்தப்பட்டது.
ஐக்கிய நாடுகள் குழந்தைகள்நிதியம் (UNICEF)
ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டம் (UNDP)
ஐக்கிய நாடுகளின் பேரிடர் குறைப்பிற்கான சர்வதேச யுக்தி (UNISDR)
ஒரே மாதிரியான மற்றும் நம்பத்தகுந்த தேசிய அளவிலான பேரிடர் தரவுத்தளத்தை உருவாக்குவதே இந்த 2 நாள் பயிற்சிப் பட்டறையின் முக்கிய நோக்கமாகும்.
இந்த தரவுத்தளமானது பேரிடர் அபாய குறைப்பிற்கான சென்டாய் கட்டமைப்பின் (Sendai Framework for Disaster Risk Reduction - SFDRR) இலக்குகளை அடைவதை நோக்கி மேற்கொள்ளப்படும் முயற்சிகளை கண்டறிய உதவி புரியும்.